செவ்வாய், 15 அக்டோபர், 2013

கொலையும் செய்யும் மாணவர்கள் - கேள்விக்குள்ளாகும் பெற்றோர், ஆசிரியர் மற்றும் கல்விமுறை

சமீபத்தில், தமிழகத்தை அதிர்ச்சியில் உறையவைத்த கொலைபாதக சமபவம் இது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கீழ வல்லநாட்டில் இருக்கும் குழந்தை இயேசு இன்ஜினியரிங் கல்லூரியின் மாணவர்கள் மூவர் , அக் கல்லூரியின் முதல்வரை வெட்டிக் கொலை செய்திருக்கிறார்கள்.இதில் இரண்டு மாணவர்கள் கடைசி வருடம் படிப்பவர்கள்ஒருவர் மூன்றாம் வருடம் படிப்பவர்.

சில வருடங்களுக்கு முன் , பள்ளி மாணவன் தன்னுடைய ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவமும் நடந்தது.

ஆகபள்ளிக் கல்வி , உயர் கல்வி எதுவாக இருந்தாலும்மாணவர்களுக்கு கோபத்தை கட்டுப் படுத்த சொல்லித் தருவதில்லை

மாணவர்களிடத்தில் கட்டு மீறிய ரௌடித் தனமும்கொலை பாதகங்களை அஞ்சாமல் செய்யும் கொடூரமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.

சென்னையில்சில கல்லூரிகளுக்கான பஸ் ஸ்டாப்பில் கூட அந்தந்த பஸ்கள் நின்று செல்வதற்கு அஞ்சும் சூழ்நிலையும்மாணவர்கள் பொது இடங்களில் செய்யும் அத்து மீறிய அட்டகாசங்களும் இதற்கு சான்று.

இளம் மாணவர்களுக்குஇது போன்ற கொலை செய்யும் அளவிற்கு கொடூர எண்ணங்களும்எதற்கும் அஞ்சாமல் அதை செயல்படுத்தும் போக்கும் ஏன் வருகிறது?

வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டிய வயதில்கொடூரமான கொலை குற்றங்களிலும்வன்முறைகளிலும் ஈடுபட்டு வாழ்வை தொலைப்பது ஏன்?

நம் நாட்டை பொறுத்த வரையில்குழந்தைகள் படித்து வேலைக்கு போய் சம்பாதித்து , தன் சொந்தக் காலில் நிற்கும் வரை , முடிகிறதோ இல்லையோஅவர்களை தூக்கி சுமப்பவர்கள் பெற்றோர்கள் .   பெரும்பாலான மாணவர்கள் , தங்கள் பெற்றோர்களின்   பிரதிபலன் பாராத இத்தகைய ஆதரவை புரிந்தே நடந்து கொள்கிறார்கள்.

ஆனால்இதுவே சில மாணவர்களின் பொறுப்பற்று திரியும் போக்கிற்கு காரணமாகவும் அமைந்து விடுகிறதுதன்னுடைய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு பெற்றோர் இருக்கிறார்கள் என்ற உறுதி , இம் மாணவர்களுக்கு சுய ஒழுக்கம்பொது ஒழுக்கம் எதை பற்றியும் அக்கறையற்ற போக்கை உருவாக்குகிறது.
பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்காக தான் செய்கிறார்கள் என்றாலும்அவ்வாறு செய்வது பெற்றோரின் கடமை என்ற உணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்தாமல்பெற்றோரின் அன்பும்பண்பும் தான் அதற்கு காரணம் என்று புரிய வைக்க வேண்டும்இது போன்ற நுணுக்கமான உணர்வு சார்ந்த வலியுறுத்தல்கள் தேவை . அப்போது தான் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை 'take it for granted ' ஆக கருதுவதை தடுக்க முடியும்பெற்றோரின் அன்பையும்பண்பையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டியதன் கட்டாயமும் புரியும்அதுவே, 'கடமைஎன்று புரிந்து கொள்ளப்படும்போதுஅங்கு 'எப்படியும் செய்துதானே ஆகவேண்டும்என்ற அலட்சியம் குழந்தைகளின் எண்ணத்தில் வந்து விடுகிறது.


இன்றைய கல்வி முறைமாணவர்களை மாணவர்களை வேலைக்கு தயார் செய்யும் தொழிற்சாலைகள் போல தான் இருக்கின்றனமாணவர்களுக்கும்ஆசிரியர்களுக்கும் இடையிலான உறவு சிக்கலானதுஇவர்களுக்கு இடையிலான இடைவெளி மிகப் பெரியதுதனக்கு எல்லாம் தெரியும்தான் சொல்லிக் கொடுப்பதை கேள்வி கேட்காமல் மாணவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற 'obey orders' முறை தான் இருக்கிறது.

கவனத்தை சிதறடிக்கும்  அனைத்து விஷயங்களுக்கும் நடுவில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மாணவர்களுக்குஅவர்களுடன் நட்பு பூர்வமாக பழகிதிசை திருப்பும் விஷயங்களை கையாளும் முறையை கற்றுக் கொடுத்து ,அறிவையும்,  கல்வியையும்  பகிர்ந்தளிக்கும் ஆசிரியர்கள் தான் தேவைபொதுவாகவே மாணவர்களிடத்தில் நட்பாக பழகிஅதே நேரம் நன்றாக கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு தனி மரியாதை உண்டுஇதில் 'நட்பாக பழகுவதுஎன்பதில் , மாணவர்கள் தங்களுடைய தனிப் பட்ட வாழக்கையின் சின்ன சின்ன விஷயங்களைக் [ விரும்பும் பெண்கள் உட்படகூட இந்த ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொண்டுஆலோசனையும் பெறுவதை பல நேரங்களில் பார்க்க முடிகிறது.. குறிப்பாக 'troublesome' மாணவர்கள் இது போன்ற ஆசிரியர்களிடம் ஆட்டுக்குட்டி போல நடந்து கொள்வதை பார்க்கும்போதுஅதீத ரௌடியிசம் பண்ணும் மாணவர்களை இது போன்ற ஆசிரியர்களால் வெகு எளிதாக நல்வழிப்படுத்த முடியும் எனபது தெளிவு

ஆனால்சரியான புரிதல் இல்லாத ஆசிரியர்களே பெரும்பாலும் என்பதால் மாணவர்களுக்கும்இத்தகைய ஆசிரியர்களுக்கும் இடையில் மோதல் நாளுக்கு நாள் கடுமையாகிக் கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை

படிப்பு அறிவைத் தேடுவதாக இல்லாமல்வேலையை தேடும் கல்வியாக இருப்பது மாணவர்களை சண்டைக் கோழிகளாக மாற்றுகிறதுஇன்றைய கல்விமுறை அகல உழுகிறதே தவிர ஆழ உழவில்லை என்று ஒரு நண்பர் கூறியது நூற்றுக்கு நூறு சரியானதே.

பண்புகளை ஊட்டி வளர்க்காத பெற்றோர்களும்பிராய்லர் கோழிகளை உருவாக்கும் கல்வி நிலையங்களும்ரௌடித்தனம் செய்வது மாணவனின் பிறப்புரிமை என்று அவர்கள் மண்டையில் மீண்டும் மீண்டும் தொடர்ந்து ஏற்றிக் கொண்டிருக்கும் திரைப் படங்களும்எங்கெங்கு காணினும் நீக்கமற நிறைந்திருக்கும் டாஸ்மாக் கடைகளும் நாட்டை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லவேண்டிய மாணவர் சமுதாயத்தை படுகுழியில் தள்ளிக் கொண்டிருப்பதோடு அல்லாமல்அவர்களில் சிலரை கொலைக் குற்றவாளிகளாகவும் ஆக்கிக் கொண்டிருக்கிறது.

மாணவர் சக்தி என்பது  அபாரமானதொரு ஆக்க சக்திஅதுவேசில சமயங்களில் அழிவுசக்தியாக மாறும்போது , அதற்கான  தண்டனையும் கடுமையாக்கப் படவேண்டும்மாணவனுக்கான மதிப்பு மிக்க அடையாளமாக கருதிக் கொண்டு ரௌடிதனங்களில் ஈடுபடும் மாணவர்களை எந்த வித கருணையுமின்றி கடுமையாக தண்டிக்க வேண்டும்.


இது பெற்றோர்கல்வி நிலையங்கள்திரைப்படங்கள் , சட்டம் என்று ஒட்டுமொத்த சமூகமும் கூடி இழுக்க வேண்டிய தேர்.

1 கருத்து: