வியாழன், 14 மார்ச், 2013

மார்ச் 8 உலக பெண்கள் தினம்

உலக மயமாக்கலுக்கு பின் பெண்களின் நிலை எப்படி இருக்கிறது?

கல்வியை பொறுத்த வரையில், பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. பெண்கள் மருத்துவ துறை சார்ந்த படிப்புகளை அதிகம் தேர்வு செய்து படிக்கின்றனர். இன்ஜினியரிங் படிக்கும் மாணவிகள் வெறும் 15 சதவீதம் மட்டுமே.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புது புது கண்டுபிடிப்புகள் போன்றவற்றில் பெண்களின் பங்கு இல்லை என்பது தான்  இன்றைய 21ஆம் நூற்றாண்டிலும் நிலைமையாக இருக்கிறது .
பணியிடத்தில் , பெண்கள்  மிக உயரிய பதவிகளை அடைவதில் சிக்கல் இருக்கிறது. பெரும்பாலான பெண்கள் mid level என்கிற அளவோடு தங்கள் பணியிட சாதனைகளை முடித்துக் கொள்கிறார்கள்இதற்கு காரணம் பெண்களின் குடும்ப பொறுப்புகள்குடும்பமா, வேலையா என்றால் , பெரும்பாலான பெண்கள் , குடும்பத்தையே முதலிடத்தில் வைக்கிறார்கள். குடும்பத்தின் ஆதரவு இருந்தாலும், குழந்தைகளுக்கு தாயின் மீது இருக்கும் emotional  dependency - ம்  இதற்கு ஒரு முக்கிய காரணம். இது இந்தியப் பெண்களுக்கு தான் என்றில்லை. உலக பெண்கள் அனைவரும் இதை எதிர்கொள்கிறார்கள்.

இந்தியாவின் அனைத்து வகையான ஊடகங்களும் பெண்களை பல வகைகளிலும்  பாராட்டிக் கொண்டும் , ஆணாதிக்க மனோபாவத்தை  கடுமையாக சாடிக் கொண்டும் இருக்கும்  வேளையில், சற்றே வித்தியாசமாக சென்னையை சேர்ந்த ஆண் bloggers சிலரிடம் இது குறித்து கேட்கப் பட்டது.
இதோ ஆண்களின் பார்வையில் பெண்கள் :

பெண்கள் பூப்பெய்தியதை ஒரு விழாவாக எடுத்து சிறு பெண்களை கூச்சப் படவைக்கும் சடங்குகள், பெண்கள் படித்து முடித்தவுடன் அவர்களை யார் கையிலாவது திருமணம் என்ற பெயரில் பிடித்துக் கொடுத்துவிடவேண்டும் என்று எண்ணுவது போன்றவற்றை விடுத்துகுடும்பங்கள்,அவர்களை சுதந்திரமாக தான் சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்கிறார் முத்தையா ஸ்ரீராம்

சினிமாக்களில் பெண்களை மோசமாக , ஆபாசமாக  சித்தரிப்பதோடு அல்லாமல், ஆண்களுக்கு அடங்கியவர்களாகவே தொடர்ந்து காட்டப் படுவது , சினிமா மேல் அதீத மோகம் கொண்ட சமூகத்தில் உள்ள மனிதர்களின் கண்ணோட்டத்தில் பாதிப்பை ஏற்ப்படுத்துகிறது. இவை தடுக்கப் படவேண்டும் என்கிறார் ராம் திலக்.

தாயை மதிப்பவன், எந்த சூழ்நிலையிலும்  பிற பெண்களை அவமதிக்க மாட்டான். பெண்களை அவர்களுடைய அறிவுக்காகவோ, செயலுக்காகவோ மதிக்கத் தெரியாதவர்கள் கூட , எல்லா பெண்களும் தாய் என்ற அந்தஸ்தை ஒரு நிலையில் அடைகிறார்கள் என்பதற்காகவே மதிக்க வேண்டும் என்கிறார் ஹரி கிருஷ்ணா .
இந்தியப் பெண்களை தாக்கும் Auto –Immune diseases :
1.      Hashimoto's thyroiditis.
2.      Graves' disease
3.      Multiple sclerosis (MS)
4.      Myasthenia gravis
5.      Systemic lupus erythematosus (lupus)
6.      Rheumatoid arthritis
இவை தவிர Osteoporosis போன்ற அனைத்து நோய்களையும் பட்டியலிட்டு, அதற்கான தடுப்பு மற்றும் வந்த பின் அதற்கான மருத்துவ முறைகள் குறித்து உள்ளார்ந்த அக்கறையோடு விவாதிக்கிறார் தீபக் ரகுராமன்.  


இந்தியாவில்,பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடும் school  dropouts  6-10 வயது வரைஉள்ள குழந்தைகள் 25 %. இதுவே 10-13 வயது குழந்தைகள் என்றால் அது 50% என்று அதிகரிக்கிறது என்று சொல்கிறது அரசு குறிப்பு [ Time Magazine dated April 29, 2010] .  23% பெண் குழந்தைகள் பூப்பெய்தியவுடன், சரியான சானிடரி நாப்கின்ஸ் வாங்க முடியாததால் / கிடைக்காததால், பள்ளிப் படிப்பை நிறுத்திவிடுகிறார்கள். [AC Nielsen- Plan India Survey ] .  உலக அளவில் 40% [ 4 மில்லியன்குழந்தைத் திருமணங்கள் இந்தியாவில்தான் நடக்கின்றன [BBC dated October 2011].  2010-ல் இருந்ததை விட 2011-ல் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 3 மில்லியன் அதாவது 30 லட்சம் குறைவு ! பெண் குழந்தைகள் பிறப்பதற்கே அனுமதி வேண்டி இருக்கிறது. இதையும் தாண்டி , பிறந்து விட்டால், பெண்கள் படிப்பதற்கு பிறர் அனுமதி வேண்டி இருக்கிறது.திருமணம் வேண்டுமா, வேண்டாமா?..குழந்தை வேண்டுமா வேண்டாமா போன்று எந்த விஷயத்திலும் தனி உரிமை என்பது இல்லை என்று ஆதாரங்களை அடுக்கி விவாதிக்கிறார் Sylvian Patrick.

ஆண்கள் பல கோணங்களில் பெண்கள் குறித்த கருத்துகளை எடுத்து வைத்தாலும் எல்லோரும் ஒரே குரலில் கூறியது அவர்களுடைய ஆதர்சப் பெண், அவரவருடைய  'அம்மா' என்பதுதான். தங்களுடைய எண்ணம், செயல் என்று அனைத்தும் தங்கள் அம்மாவின் வளர்ப்பினால் வந்ததே என்றார்கள்.

ஆண்கள், 'தாய்' என்கிற பெண்களால் உருவாக்கப்படும் பிம்பங்களே என்பது தெளிவு.

ஆண்-பெண்  சம உரிமை, சுதந்திரம் போன்றவை வேறெங்கும் இல்லை. இவற்றை சமூகப் பழக்கத்தில் கொண்டுவருவதுஅம்மா’ வாகிய பெண்களிடம் தான் இருக்கிறது. அவற்றை நிலை நிறுத்தும் வகையில்  பாட திட்டங்களும் வடிவமைக்கப் படவேண்டும் என்பது அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக