புதன், 14 நவம்பர், 2012

'கடவுள்' மறுப்பு என்பது சரியான கோணம்தானா?

கடவுளை நம்புபவன் முட்டாள் !! - தமிழ்நாட்டின் fashion statement இது !

இதை படித்தவுடன் தோன்றுவது  ஒன்றுதான் .

ஒருவரை முட்டாள் என்று காறித்துப்பும் அதிகாரத்தை யார் கொடுத்தது ??  அப்படி சொல்வதனால் ஏற்படுகிற அறிவிலிதனத்தை என்ன செய்வது ???

இது கடவுளையும், மதத்தையும்  பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.

கடவுள் என்பது நம்பிக்கை . அந்த நம்பிக்கையை தக்க வைத்து கொள்ள மனிதனால் படைக்கப்பட்ட ஒரு சப்போர்ட் சிஸ்டம் தான் மதம்.

இதில் கடவுளுக்கு உருவம் இருக்கலாம். உருவம் இல்லாமல் இருக்கலாம். இயற்கையே கடவுளாகவும் இருக்கலாம்.

 மனிதனுக்கு ஏன் கடவுள் மீது இவ்வளவு காதல் ?

மனித வாழ்க்கையில் , தனியொரு மனிதனால் சமாளிக்கமுடியாத, சக மனிதர்களால் உதவி செய்து சரிபண்ண முடியாத துன்பங்கள் நேரும்போது , மனிதமனம் அதன் சக்திக்கு அப்பாற்ப்பட்டு ஒரு சக்தியை தேடுகிறது. அந்த மாதிரி ஒரு சக்தி இருப்பதாக நம்புகிறது. அந்த நம்பிக்கை தான் கடவுள்.

இந்த கடவுள் நேரில் வரவேண்டும் என்பதில்லை. இன்ப துன்பத்தில் உதவி செய்யவேண்டும் என்பது இல்லை. ஆனால், கடவுள் என்ற நம்பிக்கை மனிதனுக்கு, துன்பங்களை சமாளிக்கக்கூடிய , அதிலிருந்து மீண்டு வருவதற்கான சக்தியை, அதிலும் சக மனிதர்களால் அளிக்க முடியாத சக்தியை அளிக்கிறது. மனிதனைப் பொறுத்தவரையில், கடவுள் என்பது , அவனுடைய வாழ்க்கையின், மிக முக்கியமான தருணங்களில் பற்றுவதற்கான ஒரு பிடிமானம். ஒரு ஊன்றுகோல்.

அதை மறுப்பதும், வைத்துக் கொள்வதும் ஒவ்வொரு தனிப் பட்ட மனிதனுடைய சுதந்திரம். இதில் அடுத்தவர் அபிப்ராயம் கூறுவது என்பதை என்னவென்று கூறுவது ?

கடவுள் மறுப்பு என்பது இந்து நம்பிக்கைகளின் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு அம்சம். ஆனால்  கேள்வி,  ஒருவரின் கடவுள் நம்பிக்கையை ..அது ராமன், அல்லா , ஜீசஸ்  எதுவாக  இருந்தாலும் , முட்டாள்தனம் என்று அடுத்தவர் கூறுவது எந்த உரிமையில் ?? கடவுள் என்பது அதை  நம்பும் மனிதனுக்கு தேவையான நேரத்தில் பற்றிக்கொள்ளும் ஒரு ஊன்றுகோல் . அதை  கேள்வி கேட்க யாருக்கும் அதிகாரம் கிடையாது

கடவுள் என்பது தனிமனித நம்பிக்கை . மனிதனின் உளவியல் ரீதியிலான தேவை !

இதில் கடவுளுக்கு உருவம் இருக்கலாம். உருவம் இல்லாமல் இருக்கலாம். இயற்கையே கடவுளாகவும் இருக்கலாம்.

கடவுள் என்ற அந்த நம்பிக்கையை தக்க வைத்து கொள்ள மனிதனால் படைக்கப்பட்ட ஒரு சப்போர்ட் சிஸ்டம் தான் மதம்.

இதில் தான் பிரச்சினை. வழிபாட்டு முறைகள் சக மனிதனை ஒதுக்கியோ, இழிவுபடுத்தியோ அல்லது ஏற்றத் தாழ்வுகளை வலியுறுத்தியோ இருக்கும்போது , அங்கு கேள்வி எழுப்பப் படுகிறது.

அது வழிபாட்டு முறையின் மீதான கேள்விகளாகத்தான் இருக்க வேண்டுமே ஒழிய , கடவுள் குறித்த கேள்விகளாக இருப்பது மிகவும் தவறு.

பகுத்தறிவு புரட்ச்சிக்கு பெயர்போன  தமிழ்நாட்டில் இன்று  மத நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. வழிபட்டுத்தலங்களின்  எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மத சடங்குகள் என்ற பெயரில் மனிதருக்கிடையிலான பாகுபாடுகளும், வேறுபாடுகளும் அதிகரித்திருக்கின்றன.

பகுத்தறிவு வாதம் என்ற பெயரில் கடவுள் என்ற தனிமனித ஊன்றுகோலை பிடுங்குவது என்பது சமுதாய ஒழுக்ககேட்டிற்கு தான் வழி வகுக்கிறது.

கடவுள் self-discipline -காக  தனி மனிதன் தனக்கு தானே போட்டுக் கொள்ளும் கடிவாளம். எனவே எத்தனை பகுத்தறிவு புரட்ச்சியாலும்  மனிதனின் இந்த உளவியல் ரீதியிலான தேவையை நீக்கமுடியாது. மாறாக அது எதிர்மறையான சமூக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

அதனால் கடவுள் மறுப்பு என்பதை விட, கடவுளை  பொது வெளிக்கு அழைத்து வராமல் .அவரவருக்கான வீடு  என்கிற நாலு சுவற்றுக்குள் வைத்திருக்க சொல்வது நலம்.

கடவுளும் செக்ஸ் மாதிரிதான் . நாலு சுவற்றுக்குள் இருக்கும் வரை தான் அழகு.

5 கருத்துகள்:

  1. முற்றிலும் சரி. கடவுள் மேல யாருக்கும் எந்த கோபமும் இல்லை. அவரோட ரசிகர் மன்றம் பண்ற கூத்துக்கள் தான் கொடுமையா இருக்கு. அறை எண் 305ல் கடவுள் படத்துல இதே மாதிரி ஒரு சீன் வரும். கடவுள் இல்லாட்டி கூட கடவுள் மாதிரி யாராவது மக்களுக்கு வேணும்.
    கடைசி லைன் அட்டகாசம்.

    பதிலளிநீக்கு
  2. kadavul irukiraru enbathu nambikai....ennai poruthavarai namaku achamayathil ethu nambikai tharukirotho athu kadavul!!

    ungal karuthukalum tamil nadayum mikavum nandraga irunthathu!!

    nandri.

    பதிலளிநீக்கு
  3. yes, Hindu GODS are always having sex that too man god with man god, also with animals.

    பதிலளிநீக்கு
  4. கடவுள் நம்பிக்கை மூட நம்பிக்கைத்தான். ஆனாலும் நமக்கு அது வசதியானது. வாழ்க்கையில் கஷ்டம் வரும் பொழுது, சக மனிதர்களை நம்புவதைவிட "கடவுளை" நம்புவது அல்லது திட்டுவது அல்லது வேண்டுவது மேல். யாரை நம்பினாலும் பயன் கிடைக்கப்போவதில்லை. எது நடக்குமோ அது நடக்கும். எதுவும் கடந்து போகும்.
    கடவுள் பக்தி நமக்குக் கொடுத்த முக்கிய கொடை "கலை", முக்கியமாக இசையும் சிற்ப,கட்டிடக்கலையும். பக்தி இல்லாதிருந்தால் இந்த கர்நாடக (கர்ணம் - நடனம்;ஆடல் - நாடகம் - கூத்து)இசை நமக்கு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.இருக்கும் அரசர்களையும் அரசியல்வாதிகளையும் பற்றி பாடுவதை விட இல்லாத கடவுளை பாடுவது எவ்வளவு மேல். கற்பனைஎன்றாலும் கற்சிலைஎன்றாலும் கந்தனே உனை மறவேன்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பயன் இல்லை என்று தெரிந்தே "கடவுளை" நம்பலாம். கடவுள் வியாபாரிகளையும், மதவாதிகளையும் நம்பவே கூடாது.

    பதிலளிநீக்கு