ஞாயிறு, 11 நவம்பர், 2012

தர்மபுரி சம்பவம் ஜாதி வெறியின் உச்சம் !!!!


இந்த முறை வெறி பிடித்தது வன்னிய சமுதாயத்தினருக்கு !

இச் சம்பவம் தமிழ் நாட்டின் நிஜமுகத்தை, அதன் கோரமுகத்தை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது !


கொண்டாடப்படவேண்டிய ஒரு கலப்பு திருமணம் , 3 கிராமங்களை சேர்ந்த 148 தலித் வீடுகள் தீக்கிரையாவதர்க்கும், உயிர்பலிக்கும் காரணமாகி இருக்கிறது !


2 , 3 நாட்களுக்கு முன்னர் தான் 'பிராமணாள் கபே ' பெரிய புயலை கிளப்பியது

! தி.க.காரர்கள் வரிந்து கட்டிக்கொண்டு கூட்டங்கள் நடத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

நல்லது ...!


ஆனால், தர்மபுரி சம்பவம் அதை விட கொடுமையான , கடுமையாக கண்டிக்கப் படவேண்டிய , தண்டிக்கப் படவேண்டிய ஒரு குற்றம் !


இதற்கு வன்னிய அமைப்புகள் என்ன வகையில் பொறுப்பேற்க போகின்றன ? வோட்டு வங்கிகளாக செயல்படும் இந்த அமைப்புகள் , இந்த மாதிரியான சமூக குற்றங்களுக்கும் தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டியது கட்டாயமாகிறது !


தி.க. காரர்கள் இதை எதிர்த்து சம்பவ இடத்திற்கு சென்று பொது கூட்டம் போடுவார்களா ? ஜாதிய வெறியை எதிர்த்து, அந்த பகுதி வன்னியர்களின் இந்த வெறியை எதிர்த்து, கடுமையான தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்களா??
வன்னிய மக்களின் பேரால் நடக்கும் அரசியல் கட்சிகள் இதற்கு பொறுபேற்க வேண்டுமல்லவா?
இங்கு ஜாதிய எதிர்ப்பு எனபது, மிகவும் போலியாக, பலனளித்து மக்கள் எந்த வகையிலும் அதிலிருந்து வெளியில் வந்து விடக் கூடாது என்ற கவனத்துடன் , பல ஜாதீய அமைப்புகளினாலும், கட்சிகளினாலும் நடத்தப் படுகிறது !!


ஜாதிய எதிர்ப்பு என்ற போர்வையில், ஜாதி வெறி தூண்டிவிடப்பட்டுக்கொண்டே இருக்கிறது !


பிராமணர்களை எதிர்ப்பது மட்டுமே ஜாதி எதிர்ப்பு அல்ல ! பெரியார் தன்னுடைய காலத்திலேயே அதை செய்து முடித்துவிட்டார். இனி எதிர்க்கப் படவேண்டியது மீதி இருக்கும் எண்ணிலடங்கா மற்ற ஜாதிகளும் தான் !
 

ஜாதியும், தமிழ் சமூகமும் !
 
இன்று தமிழ்நாட்டில் எந்த ஒரு பிரச்சினையும் ஆழ்ந்து யோசிக்கப்படுவதில்லை ! சமூகப் பிரச்சினையானாலும் சரி, அரசியல் பிரச்சினையானாலும் சரி , அதன் மேல் அனைத்து பிரச்சினைகளையும் இணைத்து, தேவையில்லாத , சொல்லப்படாத கருத்துகளையும், அர்த்தங்களையும் அதன் மேல் பொருத்தி, புகுத்தி , அடிப்படையான அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு வழி தேடாமல், வெறும் வாய் சவடால்களிலேயே நேரம் செலவிடப்படுகிறது !

கருத்து சுதந்திரம் என்பத
ற்கான அர்த்தம், புரிதல் இல்லாமல் மீறப்படுகிறது , மாற்றப்படுகிறது, திரிக்கப்படுகிறது !

ஜாதியை ஒழிப்பது என்பதை மறந்து , ஜாதி வெறி தலைவிரித்தாடிக்கொண்டு இருக்கிறது ! ஜாதி சங்கங்களும் , ஜாதி அமைப்புகளும், ஜாதியை கட்டிக்காப்பதில் தான் அக்கறையாக இருக்கிறார்களே தவிர , அடிப்படையான பிரச்சினையான அந்த ஜாதி என்கிற பிரிவினைவாதத்திலிருந்து பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு மீட்கலாம் என்று யாரும் செயல்படுவதாக தெரியவில்லை !

இன்று ஜாதி என்பது ஒரு பெருமைக்குரிய அடையாளமாகவும், ஜாதி சங்கங்களும், அமைப்புகளும் அந்தந்த ஜாதிகளை காக்க வந்த அரண்களாகவும் பார்க்கப்படுகின்றன !

ஜாதியே வேண்டாம் , அதனால் ஏற்ப்படும் சமூகப் பிரிவினைகள் வேண்டாம் என்பதுதான் நம் நோக்கமாக இருக்கும்போது , அதற்க்கான ஆக்கபூர்வ செயல்பாடுகளில் கவனம் செலுத்தாமல், ஜாதியை அரசியலாக்கி அதில் பேரும், புகழும், தனி மனித செல்வாக்கும் ஏற்படுத்திகொள்வதிலும், ஜாதியை வோட்டுவங்கிகளாக பயன்படுத்துவதிலுமாக நம் சமூகம் சீரழிந்து கொண்டு இருக்கிறது !

இரு ஜாதிக்காரர்களை மோத விட்டு , எந்த பிரச்சினையையும் பேசாமல் தப்பிவிடலாம் !

இன்று பார்ப்பனனாக இருந்தால் பிரச்சினை ! தலித்தாக இருந்தால் பிரச்சினை ! வன்னியர், தேவர் என்று எதுவாக இருந்தாலும் பிரச்சினை தான் ! இது போதாதென்று , நாய்டு, நாயர் என்று வேறு !

ஜாதி, மதம் , இனம் என்று மிகப் பெரிய பூதங்களின் வாயில் தமிழ் சமூகம் மாட்டிக்கொண்டு திண்டாடுகிறது !

மக்களுக்கு பிடித்தது இரண்டு ! ஒன்று படிப்பது . இன்னொன்று சினிமா. இங்கு எழுத்தாளர்கள் ஜாதி அரசியல் செய்கிறார்கள் ! சினிமாவிலும் அதுதான் !

இங்கு , அமைதியாகவும், ஆர்ப்பாட்டமாகவும் மக்களை யோசிக்க விடாமல் மழுங்கடிக்கும் வேலை நடந்துகொண்டு இருக்கிறது !

சரியான தலைவர்கள் இல்லை ! மக்களை யோசிக்க வைக்க வேண்டியவர்கள் யார் ?

நாம் எங்கே போகிறோம் ????

 

7 கருத்துகள்:

  1. very insightful post :-) keep them coming:-)

    பதிலளிநீக்கு
  2. SaathiKal thAn indraya aarasiyal kabada naadagathin Soothirathaari.. athu indri.. oru aanuvum asayaathu.. thikA - thimuka- pamaka - yaaara irruthalum idharku vithi villakaga mudiyaathu...

    பதிலளிநீக்கு
  3. today's Puthiyathalaimurai discussion what Banuji said that the religious conversions take place in India 99% is not for the sake of spirituality. i find at last a women on lion lives virtually in India and that too in Tamilnadu which is once famous for such women. may be it takes 1000s of years for the birth of such women

    பதிலளிநீக்கு
  4. Don't hide in the name of social activist. we know very well who u r. to whom you are brain washed to support.

    பதிலளிநீக்கு
  5. தூங்குகிறவனை எழுப்பலாம். தூங்குபவன்போல் வேஷம் போடுகிறவனை எழுப்ப முடியாது. ஜாதி ஒழியவேண்டும் ஜாதி பாகுபாடு கூடாது என்று முழக்கமிடும் அரசியல்வாதிகளின் செயல்பாட்டில் அவர்கள் வேஷம் கலைகிறது.

    பதிலளிநீக்கு